புல் தின்னாக் குதிரை
கிருஷ்ண தேவரயரின் குதிரை படையில் ஆயிரக்கணக்கான அரேபியக் குதிரைகள் இருந்தன. யுத்தம் இல்லாத காலங்களில் அவைகளைப் போஷிக்க அதிகச் செலவாகிக் கொண்டிருந்தது. அதைக் குறைக்க ஏதேனும் வழி உண்டா என்று யோசித்தான் அரசன். "ஏன், வீட்டுக்கு ஒரு குதிரையை கொடுத்து வளர்க்கச் சொன்னால் போகிறது" என்று ஆலோசனை கூறினார் மந்திரி.
"அத்றாகான செலவை அவர்களையா ஏற்றுக் கொள்ளச் சொல்வது?"
"வேண்டாமே! மாதா மாதம் அத்ற்கான சிறு தொகை கொடுத்து வந்தால் போகிறது. இருந்தாலும் இப்பொலுது ஆகும் ஏராலமான செலவு ஆகாது அப்போது".
" சரி. அவரவர், பணத்தை ஏப்பம் விட்டு விட்டு குதிரையை நன்றாகப் போசிக்காவிட்டால் என்ன செய்வது?" என்ற சந்தேகத்தைக் கிளப்பினார் அரசர்.
"அதற்காக குறைந்தபச்சம் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவையேனும் குதிரையைக் கொண்டுவந்து நமக்குக் காட்டிவிட்டுப் போகும்படி ஏற்பாடு செய்து விட்டால் போகிறது." என்றார் மந்திரி.
"அது சரியான யோசனை தான்" என்றார் அரசர்.
உடனே நகரம் முழுவதும் தண்டோரா போடப்பட்டது. அவரவர்கள் வளர்ப்பதற்கான ஒரு குதிரையை பெற்று சென்றார்கள். தெனாலிராமனும் ஒரு குதிரையைப் பிடித்துக்கொண்டு போனான் அந்த குதிரை பார்ப்பதற்கு வெகு அழகாக பளபளவென இருந்தது.
'தெனாலிராமன் மட்டும் எப்நேர்த்தியான குதிரையை தேர்ந்தெடுத்து கொண்டு விட்டானே' என்று மற்றவர்கள் பேசிக் கொண்டார்கள்.
ஆனால், அவனோ மாதாமாதம் அரசாங்கத்திலிருந்து கிடைத்துவந்த பணத்தைத் தானே சாப்பிட்டு விட்டு, குதிரையை பட்டினி பூத தெடங்கினான். ஒரு சிறு கொட்டகை போட்டு அதை சுற்றி ஐந்தடி உயரம் வரை சுவர் எழுப்பி அதனுள் குதிரையை விட்டு வளர்த்தான் ராமன். அந்த சுவரின் ஒரு பக்கத்தில் மாத்திரம் ஒரு துவாரம் உண்டு. தினமும் அதன் வழியாக ஒரு கைப்பிடி புல்லை உள்ளே நீட்டுவான், லபக்கென்று பிடிங்கிக் கொள்ளும் அந்த குதிரை.
மூன்று மாதங்கள் முடிந்தன. குதிரையை கொண்டு வந்து காட்டும்படி அவரவர்களுக்கு உத்திராவிட்டான் மன்னன். மக்களும் அப்படியே செய்தனர். ஆனால் தெனாலிராமனுடைய குதிரையை மட்டும் காணவில்லை.
உடனே கூப்பிட்டு விசாரித்தான் அரசன். "பொல்லாத முரட்டு குதிரையாக இருக்கிறது அது. கிட்டே போனால் என் மேலேயே எகிறிக்கொண்டு வருகிறது. தயவு செய்து குதிரைப்படை தலைவரை அனுப்பி அழைத்து வராச் சொல்லுங்கள்" என்றான் தெனாலிராமன்.
அவன் பேச்சைக் கேட்டு அரசன் வியந்தான். இருந்தாலும் அப்பொழுது அங்கே குதிரை படை தலைவன் இருந்ததால் தெனாலிராமனுடன் அனுப்பி வைத்தான். இருவரும் நேரே வீட்டிற்கு சென்றார்கள். "எங்கே அது? இங்கே காணவில்லை குதிரையை?" என்று தன் தாடியை உருவிக் கொண்டே அவசரப்ப்பட்டான் அந்த அதிகாரி. "அதோ பாருங்கள் அந்தத் துவாரத்தின் வழியாய்" என்றான் தெனாலிராமன். "என்ன அய்யா இது! குதிரையை இப்படி வளர்த்தால் எப்படி ஆவது? என்று வெகுண்டான் அந்த தலைவன். "கோவப்படாதீர்கள் அய்யா, அதனுடைய முரட்டுத்தனத்துக்கு அஞ்சித்தான் அப்படி வளர்க்க வேண்டியதாயிற்று, தெரியுமா? இல்லாவிட்டால் நான் இப்படியா குதிரையை வளர்ப்பேன்," என்றான் தெனாலிராமன்.
"சரி சரி இதோ நான் பார்க்கிறேன்" என்று மெதுவாய் அந்த துவாரத்தின் வழியாகத் தன் தலையை விட்டான் அந்த அதிகாரி. அதுவோ அந்த குதிரைக்கு வழக்கமாக புல் கொடுக்கும் நேரம்! அதனால் அவருடைய தடியை புல்லென்று எண்ணி லபக்கென்று பற்றிக்கொண்டது குதிரை. "ஐயோ! ஐயோ!" என்று அலறினார் அவர். குதிரை தன் பிடியை விவதாகவே இல்லை.
உடனே இந்தச் செய்தி அரண்மனைக்கு எட்டியது. அரசனும் மற்றும் சிலரும் உடனே ஓடி வந்தனர் அங்கே. அந்த அதிகாரியின் பரிதாப நிலையைக்கண்டு அவரவர்கள் பக்குவமாய் விடுவிக்க எப்படி எப்படியோ முயற்ச்சி செய்தார்கள். முடியவே இல்லை. கடைசியில் கத்தரிக்கோல் கொண்டு வந்து அவர் தாடியை அடியோடு வெட்டி விடுவிக்க வேண்டியதாயிற்று. இத்தனை வருஷங்களாக வளர்த்து வந்த அவருடைய நேர்த்தியான தாடி கடைசியில் இப்படியா பாழாக வேண்டும்!.
உடனே சுவரை இடித்து தள்ளினார்கள். உ ள்ளே எழும்பும் தோலுமாய் நிற்க கூட ஜீவனின்றி இருந்த குதிரையைக்கண்டு அரசன் மிகவும் கோபித்தான்.
"அரசே, இந்த நிலையிலே அது அவருடைய தாடியைப் பற்றிக்கொண்டு விட மறுத்தது. நான் இன்னும் அதைப் போஷாக்குடன் வளர்ந்திருந்தால் என்னென்ன செய்திருக்குமோ? யோசித்து பார்த்தீர்களா?" என்று தாழ்மையுடன் ஒன்றும் தெரியாதவர் போல் சொன்னார் தெனாலிராமன். அதை கேட்ட அரசனுக்கு குபீர் என்று சிரிப்பு வந்துவிட்டது. அதனால் அந்த தடவை தெனாலிராமன் மன்னிக்கப்பட்டான்.

No comments:
Post a Comment